புதிய மைல்கல்லை தொட்டது இலங்கை
people
sti lanka
vorona
By Shalini
கொரோனா தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் ஒரு கோடியே 35 இலட்சத்து ஆயிரத்து 175 பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக நேற்றைய தினம் மேலும் 21 ஆயிரத்து 653 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் 6 ஆயிரத்து 320 பேருக்கு மூன்றாவது டோஸாக பைசர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இது வரையிலும் 9 ஆயிரத்து 107 பேர் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸை பெற்றுள்ளனர்.
இதன்மூலம் உலகளாவிய ரீதியில் தடுப்பூசி போட்டுக்கொண்ட நாடுகளில் இலங்கை சிறந்த இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.