இலங்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள ஆதரவு
இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டை ஆதரிப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்காக இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்குவது சாத்தியமான விடயமல்ல என்ற ஆணையாளரின் கருத்துடன் தாம் ஒத்திசைவதாக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுவதற்கும் ஏதுவான வகையில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் பிரேரணைக்கு உறுப்புநாடுகள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
அத்தோடு பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்காக மேலும் காலம் வழங்குவதென்பது சாத்தியமான அல்லது பொறுப்புவாய்ந்த அணுகுமுறையாக இருக்காது என்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டை முழுமையாக ஆதரிக்கின்றோம் என மேலும் தெரிவித்துள்ளது.