இலங்கையில் மட்டும் ஏன் இந்த நிலை? சமலின் கருத்தால் சர்ச்சை
இலங்கை 2023 ஆம் ஆண்டளவில் கடுமையான பட்டினியை நோக்கி நகரப் போகின்றது என்பதையே, ராஜபக்ச அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவின் (Chamal Rajapaksa) கருத்து வெளிப்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் (Sivagnanam Shritharan) தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து நேற்றைய தினம் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கிய இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ, நாட்டு மக்கள் அரசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் கடந்த காலங்களைப் போன்று மரவள்ளிக் கிழங்கை உட்கொள்ள வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், கிளிநொச்சியில் நேற்றைய தினம் இடம்பெற்ற முன்பள்ளி திறப்பு விழாவொன்றில் கலந்து கொண்ட சிறிதரன்,
உலக நாடுகள் வளர்ந்து வருகின்ற போதிலும், இலங்கை அரசாங்கம் மட்டுமே மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.