மீண்டும் இந்தியா பயணமாகவுள்ள பசில்!
india
sri lanka
basil rajabaksha
jey shankar
By Kalaimathy
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கருக்கும் சிறிலங்கா நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.
இதன் போது இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்வதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு அமைச்சர்களுக்கிடையில் இடம்பெற்ற ஆக்கபூர்வமான மற்றும் சுமூகமான கலந்துரையாடல் பலனளித்ததாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்