கோட்டாபய- இந்திய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இரவு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும், சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அவர், கொழும்பில் இடம்பெற்றுவரும் பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
இந்தநிலையிலேயே, கோட்டாபய ராஜபக்ஷவினை சந்தித்து பேசியுள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து இதன்போது கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இருதரப்பு பேச்சுவார்த்தைகளில், இலங்கை இந்தியாவிடம் எதிர்பார்க்கும் முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை சிறிலங்கா நிதி அமைச்சரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 19 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்