மோடி அரசை தவிர்த்து ஸ்ரீலங்கா அரசாங்கம் எடுத்த முடிவு
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்திய அரசின் தலையீடு இன்றி அதானி நிறுவனத்துடன் பேச்சு நடத்த உள்ளதாக கோட்டாபய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்றையதினம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய அரசாங்கத்தின் தலையீடு இன்றி, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வது குறித்து, இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பத்திரிகையாளர்:
அமைச்சரே, எனது கேள்வி கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தைப் பற்றியது. கடந்த வாரம் அமைச்சரவை முடிவுகள் குறித்த ஊடக சந்திப்பைத் தொடர்ந்து, மேற்கு முனையத்தில் அதானியின் முதலீட்டை அங்கீகரிக்க இந்திய உயர் ஸ்தானிகராலயம் எடுத்த முடிவு தவறானது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர்: கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின்அபிவிருத்தியில் முதலீடு செய்ய அதானி நிறுவனத்தை இந்திய அரசு பரிந்துரைத்தது.
அதைத் தொடர்ந்து, இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை கிழக்கு முனையத்தை வழங்க எதிர்ப்பு தெரிவித்தது. மாறாக மேற்கு முனையத்தின் கீழ் மட்டுமே இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கான கொள்கை முடிவை இலங்கை அரசு எடுத்தது.
ஆகவே இது அதானியுடன் இதேபோன்ற முதலீடாக இருப்பதால் முதலீட்டு இடம் மட்டுமே மாறிவிட்டதால் இது தொடரும் என்று இலங்கை அரசாங்கம் கருதியது.
இந்த விஷயத்தில் அதிகாரபூர்வமாக தலையிட மாட்டேன் என்று இந்திய அரசு கூறியதால் அதானியுடன் நாங்கள் கலந்துரையாடினோம்.
மேற்கு முனையத்தில் முதலீடு செய்வது குறித்து அதானியுடன் தொடர்ந்து கலந்துரையாடுவோம் என்றார்.
இதேவேளைஆரம்பகட்ட கொரோனா தொற்று காலத்தில் நாட்டை முழுமையாக மூடியதால் பொருளாதார ரீதியில் சரிவு ஏற்பட்டதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதனால் இரண்டாம் கட்ட கொரோனா தொற்றின் போது நாட்டை மூடாமல் இருக்க ஜனாதிபதி தீர்மானித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஐந்து வருடங்கள் சீரழிக்கப்பட்ட பொருளாதாரம் நாட்டில் காணப்பட்டதால் மீண்டும் மீண்டும் நாட்டை மூடி வைக்க வேண்டிய நிலை இருக்கவில்லை எனவும் நாடு திறக்கப்பட்டதால் வைரஸ் பரவியதாகவும் கம்மன்பில கூறினார்.