அதிகரித்துள்ள வெளிநாட்டு கையிருப்பு - எதிர்வரும் காலங்களில் பணவீக்கத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, வேகமாக வளர்ந்து வரும் நாடாக இலங்கை சர்வதேச ரீதியில் முன்ணுதாரணமாக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் வெளிநாட்டு நிதி கையிருறுப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
பணவீக்கம்
இதன்படி, அடுத்த மாதங்களில் பணவீக்கம் 7 தொடக்கம் 8 வீதம் வரை குறைவடையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் யோசணைகளை நடைமுறைப்படுத்தும் போது, அதனில் பயனுள்ள கருத்துக்களை ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பரிஸ் குழுமம் உள்ளிட்ட தரப்புக்கள் யோசனை முன்வைப்பதற்கு இருந்த வாய்ப்புக்கள் மூலம் பயன்பெறாத எதிர்க்கட்சி பொது எதிர்ப்பை மாத்திரம் காட்டுவது கவலைக்குரிய விடயமாகும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.