சிறிலங்கா புலனாய்வு பிரிவினரின் சாதனைகளும் தோல்விகளும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டியதில்லை: வஜிர அபேவர்தன
சிறிலங்கா புலனாய்வு பிரிவினரின் சாதனைகளும் தோல்விகளும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டியதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இரண்டு நாள் விவாதம் நேற்று(22) மற்றும் நேற்று முன்தினம் நடைபெற்றிருந்த நிலையில், புலனாய்வு பிரிவினர் தொடர்பான விடயங்கள் நாடாளுமன்ற விவாதத்துக்குட்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டிய விவாதம் ஒன்று அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா புலனாய்வு பிரிவு
இந்த தாக்குதல் குறித்து சிறிலங்கா புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பான விடயங்களை் பகிரங்கப்படுத்தப்படக் கூடாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்படும் விவாதங்கள் பயங்கரவாதிகளை மகிழ்ச்சியடைய செய்யுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா புலனாய்வு பிரிவு பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று எனவும் அதன் நடவடிக்கைகள் இவ்வாறாக கேள்விக்குட்படுத்தப்படக் கூடாதெனவும் வஜிர அபேவர்தன மேலும் கூறியுள்ளார்.