இலங்கை தொடர்பில் அமெரிக்க தூதுவர் வெளியிட்ட தகவல்

Colombo Sri Lanka United States of America Julie Chung
By Sumithiran Aug 14, 2023 08:31 PM GMT
Report

இலங்கை மீண்டும் மீண்டு வருவதற்கான பாதையில் செல்வதில் மகிழ்ச்சி அடைவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (14) ஆரம்பமான 2023 இந்தோ-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரையாடல் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2023 இந்திய-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரையாடல் மாநாடு இன்று முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன், சிறிலங்கா கடற்படையினரால் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.

இதில் 28 நாடுகளைச் சேர்ந்த 128 பாதுகாப்புப் படையின் பிரதானிகள் கலந்து கொண்டனர்.

அங்கு உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங்,

இலங்கை மீண்டும் எப்படி மீள்வதற்கான பாதையில்

இலங்கை தொடர்பில் அமெரிக்க தூதுவர் வெளியிட்ட தகவல் | Sri Lanka Is Back On The Road To Recovery

"இலங்கை முதன்முறையாக இந்த நிகழ்வை இணைந்து நடத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். கடந்த ஆண்டு சவால்களில் இருந்து இலங்கை மீண்டும் எப்படி மீள்வதற்கான பாதையில் இறங்கியுள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

நீங்கள் உண்மையிலேயே ஒரு சர்வதேச மற்றும் பிராந்திய கேந்திர நிலையம். இலங்கையின் 75வது சுதந்திரம் மற்றும் 2023 ஆம் ஆண்டு அமெரிக்க இலங்கை இராஜதந்திர உறவுகளின் 75 வது ஆண்டை குறிக்கும் இந்த நிகழ்வை இலங்கை நடத்துவது விசேடமானது.

இந்த முக்கிய மைல்கல்லை குறிக்க இதைவிட சிறந்த நேரம் இல்லை. இந்த உரையாடல் மாநாடு பிராந்திய நாடுகளை ஒன்றிணைத்து உலகளாவிய அக்கறை கொண்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகும்.

அமெரிக்காவின் ஆதரவு

இலங்கை தொடர்பில் அமெரிக்க தூதுவர் வெளியிட்ட தகவல் | Sri Lanka Is Back On The Road To Recovery

இலங்கையில் சுற்றாடல் பாதுகாப்பு திட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது.உலகம் பற்றிய நமது பார்வை பெரிய மற்றும் சிறிய அனைத்து நாடுகளுக்கும் சம வாய்ப்பை வழங்குகிறது.

பிஜி, அவுஸ்திரேலியா, மங்கோலியா அல்லது இலங்கையில் வாழ்ந்தாலும், நாம் அனைவரும் ஒரே மாதிரியான அபாயங்களை எதிர்கொள்கிறோம், உலகெங்கிலும் உள்ள மக்கள் தீவிர வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் வறட்சி காரணமாக தற்போது உணவு பாதுகாப்பை பாதிக்கிறது.

எனவேதான் நாம் ஒன்று கூடி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது முக்கியம். இந்த பொதுவான சவால்களை எதிர்கொள்ள ஆக்கபூர்வமான வழிகளைக் கண்டறிய இது நம்மை அனுமதிக்கும்." என தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025