அமெரிக்காவை விடவும் பலமான நிலையில் இலங்கை -ஆளும் தரப்பு எம்.பி ஒப்பீடு
அமெரிக்காவை விட இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமாக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன பாவனை தொடர்பில் மாத்திரம் கேள்வி எழுப்புவது ஏன் என்பது கேள்விக்குறியாகும். ஊடகவியலாளர்கள் கூட வாகனங்களைப் பயன்படுத்துகின்றார்கள் ஆனால் யாரும் அவற்றை நோக்கி சுட்டிக் காட்டுவதில்லை என தெரிவித்த அவர், ஊடகவியலாளர்களை நோக்கி ஏன் எவரும் விரலை நீட்டுவதில்லை எனவும் கேட்டார்.
'எம்.பி.க்கள் கட்சி உறுப்பினர்களின் திருமணம், இறுதி ஊர்வலங்களுக்கு செல்வர் என்று அவர் தெரிவித்தார்.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி இலங்கையை மாத்திரம் பாதிக்கும் நிலைமையல்ல, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இந்தியா போன்ற பெரிய நாடுகள் கூட தற்போது நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக திஸாநாயக்க(SB Dissanayake) குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி கூறுவது போல் இலங்கை சரிந்த நாடாக மாறவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர், அமெரிக்காவை விட இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் பொருளாதாரம் 22.5%, இந்தியா 9.7% மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரம் 12.8% வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.