ஆபத்தில் உள்ளது இலங்கை -இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்
srilanka
danger
Sudarshini Fernandopulle
By Sumithiran
டெல்டா பிளஸ் பிறழ்வு நாட்டிற்குள் நுழையும் அபாயம் உள்ளது.இந்த நிலையில் இலங்கையும் ஆபத்திலேயே உள்ளது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே(Sudarshini Fernandopulle) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொவிட் -19 நோயாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டாலும், ஆபத்து குறையவில்லை.
ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உட்பட்ட நாடுகளில் தடுப்பூசித் திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், டெல்டா பிளஸ் பிறழ்வால் ஆபத்து மீண்டும் அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.