உலகளவில் முன்னிலை வகிக்கும் இலங்கை
கொரோனாவிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை வகிக்கின்றதாக துறைமுகம் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில் இதை குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தை குறிப்பிட்டுக் கொண்டு நாட்டை தொடர்ந்து முடக்கினால் மக்கள் பட்டினியால் மரணிக்கும் நிலை ஏற்படும்.
விரைவில் நாடு வழமை நிலைக்கு திரும்ப வேண்டும். கொரோனா தாக்கத்தினுடன் வாழ மக்கள் பழகிக் கொள்ள வேண்டும்.
வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது.
இரு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது. 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்பேர்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை வகிக்கிறது.
தடுப்பூசி செலுத்தும் பணிகளை வெகுவிரைவில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.