சிவப்பு எச்சரிக்கை நிலையிலிருந்து இன்னமும் விடுபடாத நாடு - மருத்துவ நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை
நாடு இன்னும் கொவிட் -19 அச்சுறுத்தலில் இருந்து மீளவில்லை என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் டொக்டர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொவிட் -19 தொற்றுநோய் குறித்த செய்தியாளர் மாநாட்டில் பேசிய அவர், நாடு இன்னும் சிவப்பு நிலையிலேயே இருப்பதாகவும் கூறினார். எனவே, அரசாங்கமும் மக்களும் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் மற்றும் கொவிட் அலை மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
"ஒரு நாடாக நாம் இன்னும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீளவில்லை. நாங்கள் தற்போது ஒரு நாளைக்கு 2,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளை அடையாளம் காண்கிறோம். சமூகத்தில் குறைந்தது 6,000 நோயாளிகள் உள்ளனர். நாட்டில் தினமும் 150 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நிகழ்கின்றன. நாடு ஆபத்திலிருந்து தப்பியது என்று நாம் சொல்ல வழி இல்லை.
நாடு இன்னும் சிவப்பு எச்சரிக்கையிலேயே உள்ளது. அதனால்தான், ஒரு நாடு என்ற முறையில் மக்களும், அரசாங்கமும் இது குறித்து அதிக கவனம் செலுத்துவது மற்றும் மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது முக்கியம் என தெரிவித்துள்ளார்.