உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய நாடுகளின் பட்டியல்: இலங்கைக்கு கிடைத்த இடம்
உலகின் புகழ்பெற்ற சஞ்சிகையான போர்ப்ஸ் (Forbes) கோடை காலத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 3 பயண இடங்களில் ஒன்றாக இலங்கையை (srilanka) பெயரிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் கிறீஸும், இரண்டாம் இடத்தில் மொரீஸியஸின் சில இடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கையை இந்தியப் பெருங்கடலில் தனித்துவமான தீவு நாடாக விவரிக்கப்பட்டுள்ளதுடன், பசுமையான மலைப்பகுதிகள் மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகள் கொண்ட நிலம் என குறிப்பிட்டுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை
இதேவேளை, இலங்கைக்கு கடந்த மாதத்தில் மாத்திரம் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 665 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) தெரிவித்துள்ளது.
இதன்படி, தொடர்ந்தும் இந்தியாவிலிருந்து (india) வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
அந்த வகையில், இந்தியாவிலிருந்து 31 ஆயிரத்து 225 பேரும், மாலைத்தீவிலிருந்து 7 ஆயிரத்து 984 பேரும், ஜேர்மனியில் இருந்து 7 ஆயிரத்து 374 பேரும், பிரித்தானியாவில் இருந்து 7 ஆயிரத்து 848 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |