மஹிந்தவின் வங்கிக் கணக்கிலிருந்து கொள்ளையிடப்பட்ட பணம்- தற்போது வெளியாகியுள்ள தகவல்!
சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கி கணக்கிலிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தை, பகுதி பகுதியாக செலுத்துவதற்கு, பிரதமரின் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான முன்னாள் செயலாளராக கடமையாற்றிய உதித்த லொக்குபண்டார இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதித்த லொக்குபண்டார பிரதமரின் வங்கி கணக்கிலிருந்து சுமார் 4 கோடி ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளமை, விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பணத்தை பகுதி பகுதியாக செலுத்த உதித்த லொக்குபண்டார இணக்கம் தெரிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அலரிமாளிகைக்கு அண்மையில் சென்ற உதித் லொக்குபண்டார, முதல்கட்டமாக 25 லட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பிரதமரின் வங்கி கணக்கிலிருந்து மாதாந்தம் 15 லட்சம் ரூபா வீதம் உதித்த லொக்குபண்டார பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பெற்றுக்கொண்ட பணத்தை கொண்டு நண்பர்களுடன் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளுதல், சொகுசு வாகனங்களை வாடகைக்கு பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட மேலும் பல்வேறு விடயங்களை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 13 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்