சூறையாடிய ராஜபக்சக்கள் அரசியலிலிருந்து விலக வேண்டும்!
சிறிலங்காவில் மீண்டும் ராஜபக்சக்கள் தலைமையிலான ஆட்சியை உருவாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் அரசியல் செய்தாலும் ராஜபக்சக்கள் கௌரவமாக அரசியலில் இருந்து விலக வேண்டும் என சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
முழு உலகத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்த இலங்கை, இன்று ராஜபக்ச குடும்பத்தின் ஊழல் மோசடியினால் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் எவ்வித வரையறையும் இல்லாமல் அரச நிதியை ராஜபக்ச குடும்பம் கொள்கையடித்தமையே நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்லக் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்திடம் யாசகம்பெறும் அரச தலைவர்கள்
அதேவேளை பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு அரச தலைவர்கள் சர்வதேசத்திடம் யாசகம் பெறுவதாகவும் தற்போதைய அவலநிலை கண்டு மனவேதனை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பம் மக்களாணை என குறிப்பிட்டுக் கொண்டு நாட்டு மக்களை தவறாக வழி நடத்தி ஆட்சியை கைப்பற்றி முழு நாட்டையும் சூறையாடியது என சந்திரிக்கா குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
