மன்னார் ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை!
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வாகனங்களுக்கான எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் இந்த விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவம் மற்றும் கடற்படையின் உதவியுடன் மன்னார் பிரதேச செயலக பணியாளர்களின் மேற்பார்வையில் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.
எரிபொருள் விநியோகம்
மோட்டார் சைக்கிலுக்கு 1500 ரூபாவிற்கும், முச்சக்கர வண்டிக்கு 2000 ரூபாவிற்கும், கார் உட்பட ஏனைய பெற்ரோல் வாகனங்களுக்கு 2500 ரூபாவிற்கும் என மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியொகிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஏனைய எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படாமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
காலை முதல் விநியோகம்
இந்த நிலையிலே மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று காலை முதல் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு டோக்கன் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.
நீண்ட வரிசையில் நின்று அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எரிபொருளைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.








