அமைதிப் போராட்டத்தின் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தரைப் பிரயோகம் - மனித உரிமை ஆணைக்குழு விசாரணை!
Human Rights Commission Of Sri Lanka
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
By Pakirathan
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு பெரும் தொகை பணம் செலவிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அமைதியான முறையில் மருதானையில் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணைகளை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.
மனித உரிமை ஆணைக்குழு விசாரணை
குறித்த விடயம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்கு மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைக்குழு சென்றுள்ளதாக சொல்லப்படுகின்றது.
குறித்த குழுவின் அறிக்கைகள் நாளை கிடைத்ததும், மேலதிக விசாரணைகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி