எண்ணெய் வள நாடுகளை நோக்கி விரையும் சிறிலங்கா அமைச்சர்கள்!
சிறிலங்கா அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவரான கலாநிதி சமன் வீரசிங்க ஆகியோர் ரஷ்யாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்யக்கூடிய வழிமுறைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அவர்கள் அங்கு செல்லவுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தை தடுத்து வைத்திருந்தமையால் சர்ச்சை
இந்நிலையில், அண்மையில் ரஷ்யாவின் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றை சிறிலங்கா விமான நிலையத்தில் தடுத்து வைத்து நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
அதனையடுத்து ரஷ்யா சிறிலங்காவிற்கான வர்த்தக விமானம் மற்றும் தபால் சேவை என்பவற்றை இடைநிறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கட்டார் விரையும் கஞ்சன
இதேவேளை, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் இன்று கட்டாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்குடன் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு குறித்து கலந்துரையாடும் நோக்கில் அவர்களது விஜயம் அமையவுள்ளது எனவும் தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
