இடைநிறுத்தப்பட்டது ரஷ்யாவுக்கான மற்றுமொரு சேவை!
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Russian Federation
Aeroflot
By Kalaimathy
ரஷ்யாவிற்கு தபால் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கான வர்த்தக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், விமானப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுடன் ரஷ்யாவுக்கான தபால் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை ரஷ்ய எரோஃப்ளோட் விமான சேவை இலங்கைக்கான வணிக விமான சேவைகளை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
