சரத் வீரசேகரவின் பாதுகாப்பு அதிகாரி மீது வாள் வெட்டுத் தாக்குதல்!
சிறிலங்காவின் உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த உதவி காவல்துறை அத்தியட்சகர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவரே வாள் வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான உதவி காவல்துறை அத்தியட்சகர் வசித்து வரும் மகரகமை பிரதேசத்தில் உள்ள வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக மகரகமை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உதவி காவல்துறை அத்தியட்சகரை வாளால் வெட்டியதாக கூறப்படும் அவரது மைத்துனர் சம்பவத்தை அடுத்து தப்பிச் சென்றுள்ளார்.
தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்ய காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

