ஐ.நா தீர்வு வழங்குமா? ஏக்கத்துடன் 5 ஆண்டுகள் வீதியில்- கதறும் தமிழர் தாயக உறவுகள்!

sri lanka protest mullaitivu war northern province missing persons united nation
By Kalaimathy Mar 08, 2022 07:11 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யுத்தம் முடிந்து இன்று வரை தங்களுடைய உறவுகளை தேடி தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 

அந்தவகையில் 2009 மே மாதம் 18ஆம் திகதி யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் தங்களுடைய உறவுகளை கையளித்தவர்கள் யுத்த காலப் பகுதியின் போது காணாமல் போன உறவுகள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் என பலதரப்பட்ட வகைகளிலும் கடத்தப்பட்டும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளைத் தேடி தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். 

இவ்வாறு போராட்டங்களை ஆரம்பித்து தமக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளமுடியாத நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வடக்கு கிழக்கில் எட்டு மாவட்டங்களிலும் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை ஆரம்பித்தனர்.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் 2017 மார்ச் மாதம் 8ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கொட்டகை அமைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று வரை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. 

அந்த வகையில் மார்ச் 8ஆம் திகதி இன்று சர்வதேச மகளிர் தினத்தில் ஐந்து ஆண்டுகள் தொடர் போராட்டத்தை நிறைவு செய்து ஆறாவது ஆண்டாக இந்த போராட்டம் தொடர்கின்ற நிலையில் கூட இன்று வரை தங்களுக்கான எந்தவிதமான தீர்வுகளும் கிடைக்கவில்லை என்று தெரிவித்து, மார்ச் 8ஆம் திகதி மகளிர் தினத்தை புறக்கணித்து சர்வதேச நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். 

அந்தவகையில் இன்று காலை 10 மணிக்கு முல்லைத்தீவு இராஜப்பர் ஆலய முன்றலில் ஆரம்பித்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்  முல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தில் நிறைவடைந்தது. பல நூற்றுக்கணக்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அதன் போது நீ கொண்டுபோனவர்கள் எங்கே?, உங்கள் இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்?, இராணுவத்திடம் ஒப்படைத்த எம் பிள்ளைகளுக்கு மரண சான்றிதழ் தான் பதில் என்றால், கொலை செய்தவன் யார் ?, கொடுப்பனவுகளை கொடுப்போம் என்று சொல்வது கொலை செய்த கதையை மறைக்கவே, பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே நீதியின்றியே இறந்துகொண்டிருக்கின்றோம்.

மேலும்  எங்கே எங்கே உறவுகள் எங்கே, எங்கே எங்கே இராணுவத்திடம் கையளித்த உறவுகள் எங்கே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், வேண்டும் வேண்டும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும், மகளிர் தினம் எமக்கு துக்கதினம், வேண்டாம் வேண்டாம் ஓ.ம்.பி வேண்டாம், வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடன் நீக்கு, நிறுத்து நிறுத்து இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து, குடும்பம் குடும்பமாக சரணடைந்தவர்கள் எங்கே, ஐக்கிய நாடுகள் சபையே நீதியை வழங்கு, எங்கே எங்கே எமது குழந்தைகள் எங்கே, நட்டஈடும் வேண்டாம் மரண சண்றிதழும் வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு இந்த போராட்டம் இடம்பெற்றது. 

குறித்த போராட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, Neuenrade, Germany, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025