இலங்கைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 15 இந்திய கடற்தொழிலார்கள் கைது
இலங்கையின் வெவ்வேறு பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 27 இந்திய கடற்தொழிலாளர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (14) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அண்டை நாட்டு கடற்தொழிலார்களினால் இலங்கையில் அத்துமீறி சட்டவிரோதமான முறையில் நிகழ்த்தப்படும் மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக அடிக்கடி ரோந்து நடவடிக்கைகளை சிறிலங்கா கடற்படையினர் மேற்கொள்வது வழக்கமான செயற்பாடாக அமைந்து வருகின்றது.
கடற்றொழில் பரிசோதகர்களிடம்
நேற்றைய தினம் (14) இவ்வாறாக மேற்கொள்ளப்பட்ட ஒரு தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கையில் வெவ்வேறு பாகங்களில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுப்ப 27 இந்திய கடற்தொழிலார்ககள் கைது செய்யப்பட்டமை மாத்திரமல்லாது, அவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய 05 இழுவைப்படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார் கடற்பகுதியில் 02 இழுவைப்படகுளில் மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்தியக் கடற்தொழிலார்களையும், யாழ்ப்பாணம் நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவுக்கு அருகில் 03 இழுவைப்படகுளில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 கடற்தொழிலார்களையும் சிறிலங்கா கடற்படையினர் கைது செய்து உடைமைகளை கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலார்களையும் அவர்களது உடைமைகளையும் தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாண கடற்றொழில் பரிசோதகர்களிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டில் இதுவரை சிறிலங்கா கடற்படையினரால் 22 இந்திய மீன்பிடி இழுவை படகுகளும் 137 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.