கடந்து போன 2022 இல் இலங்கைக்கு வந்த இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள்
Sri Lanka Tourism
Sri Lanka
By Sumithiran
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைவடைந்திருந்தது.
எனினும் பொருளாதார நெருக்கடி ஓரளவு தணிந்ததாக தெரிவிக்கப்படும் நிலையிலும் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவைப்பதில் இலங்கையின் சுற்றுலா துறை அமைச்சு எடுத்த பகீரத பிரயத்தனங்களின் மத்தியில் ஓரளவு வெற்றியும் காணப்பட்டுள்ளது.
719,978 சுற்றுலாப் பயணிகள் வருகை
அந்த வகையில் கடந்த வருடம் 2022 டிசம்பர் 31 வரையான காலப்பகுதியில் மொத்தம் 719,978 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) குறிப்பிட்டுள்ளது.
2021 -2022 ஒப்பீடு
டிசம்பர் மாதத்தில் மட்டும் 91,961 வருகையுடன், 2021 இல் பதிவு செய்யப்பட்ட 194,495 சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடுகையில், 2022 இல் 525,483 சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்