சிறிலங்கா நெதர்லாந்திற்கிடையிலான ஒப்பந்தத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்!
Sri Lanka
Sri Lanka Cabinet
Netherlands
By Kalaimathy
சிறிலங்கா நெதர்லாந்திற்கிடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய சிறிலங்காவிற்கும் நெதர்லாந்துக்கும் இடையில் இருதரப்பு சிவில் விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த யோசனைக்கே, சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களை எளிதாக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்