வடக்கில் மாபெரும் மே தின பேரணி உர்வலம் - யாழில் பெருமளவு காவல்துறையினர் கடமையில்!
வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தின வாகன ஊர்வலமொன்று யாழ் நகரில் நடைபெற்றது.
இதன் போது மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பவற்றில் சிவப்பு கொடியை கட்டியவாறு ஊர்வலம் இடம்பெற்றது.
இந்த மே தின ஊர்வலம் இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து ஆரம்பித்து, யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நிறைவுபெற்றது.
யாழில் வாகன ஊர்வலம்
இன்றைய உலக உழைப்பாளர் தினம் உழைப்பாளர்கள் உரிமைக்காக கொண்டாடப்படுகின்ற நிலையில், யாழில் இன்று அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி ஊர்வலம் இடம்பெற்றது.
இதன் போது பெருமளவு காவல்துறையினரும் போக்குவரத்து காவல்துறையினரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புதிய ஜனநாயக மாக்சிசலெனினிசக் கட்சியின் பிரதான மேதினக் கூட்டமும், ஊர்வலமும் வவுனியாவில் இன்று காலை இடம்பெற்றது.
வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய ஊர்வலம் கடைவீதி வழியாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து வவுனியா மாநகர மண்டபத்தை அடைந்தது.
ஐ.எம்.எப் கடன் தொடர்பான கோசங்களுடன் ஊர்வலம்
அங்கு மேதினக்கூட்டம் இடம்பெற்றது. இதன்போது பொருட்களின் விலையேற்றம் ஐ.எம்.எப் கடன் தொடர்பாக கோசங்களையும் எழுப்பியதுடன் ஐ.எம்.எப் கடனை சித்தரிக்கும் ஊர்தியும் கொண்டு சென்றிருந்தனர்.
கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ம.பகிதரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தேசிய அமைப்பாளர் வே.மகேந்திரன், வன்னிமாவட்டங்களின் செயலாளர் நி.பிரதீபன், சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பின் இணைத்தலைவர் பூ.சந்திரபத்மன், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி சார்பாக கே.ஜிந்திசன், தொழிற்சங்கம் சார்பாக க.மகேந்திரன், பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பின் சார்பில் சிவந்தினி, ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினர். குறித்த ஊர்வலத்தில் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சியில் இரண்டு கட்சிகளின் மேதினக் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசு கட்சி மற்றும் சமத்துவக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் மேதினக் கூட்டங்களை நடத்தியிருந்தது.
இலங்கை தமிழரசு கட்சியின் மேதினக் கூட்டம் பசுமை பூங்காவிலும், சமத்துவக் கட்சியின் கூட்டம் கூட்டுறவாளர் மண்டபத்திலும் இடம்பெற்றது.
இலங்கை தமிழரசு கட்சி சார்பாக தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, சி.வி.கே சிவஞானம், ரவிகரன், அனந்தி சசிதரன் என பலர் கலந்து கொண்டார்கள்.
இதேபோன்று சமத்துவக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பெரும் திரளானோர் கலந்து கொண்டார்கள்.
















நல்லூர் கந்தசுவாமி கோவில் 16 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்
