கோட்டாபயவால் உருவாக்கப்பட்ட செயலணி நீடிக்கப்படாது- ஞானசாரர் உறுதி!
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட செயலணியின் பதவிக்கால் நீடிக்கப்டமாட்டாது என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அதன்படி 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற அரச தலைவரின் செயலணியின் பதவிக்காலம் எதிர்வரும் 28ஆம் திகதி நிறைவடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற அரச தலைவரின் செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட மாட்டாது என அதன் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்று கேள்வி எழுப்பியெழுப்பிய போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
பதவிக்காலம்
மேலும் ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான பரிந்துரைகளை ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை விரைவில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செயலணி 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி அரச தலைவரால் ஸ்தாபிக்கப்பட்டதுடன், இந்த வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி, மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது.
அதனடிப்படையிலேயே 28 ஆம் திகதி இதன் பதவிக்காலம் முடிவடைகின்றது.
