நாடாளுமன்றில் பொதுஜன பெரமுன-சுதந்திர கட்சிக்கிடையில் வெடித்தது பிரச்சினை!

parliament podujana peramuna sri Lanka sri Lanka freedom party maithribala sirisena
By Kalaimathy Nov 26, 2021 07:27 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

நாடாளுமன்றில் ஆளும் பங்காளி கட்சிக்கிடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை ஆரம்பமாகி சிறிது நேரத்தில் பொதுஜன பெரமுனவுக்கும், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலளிக்க வேண்டும் எனக் கூறி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க (Roshan Ranasinge), சபாநாயகரிடம் 7 நிமிட நேரத்தை பெற்றுக்கொண்டார்.

அதனையடுத்து, தான் கூறிய அவதூறு ஒன்றை கேட்டு, அமைச்சர் அளுத்கமகே உரை ஒன்றை நிகழ்த்தியதாக மைத்திரிபால சிறிசேன நேற்று கூறியிருந்தமைக்கு பதிலளித்து ரொஷான் ரணசிங்க உரையாற்றினார்.

எனக்கு அவதூறு பழக்கம் கிடையாது. அவர்களுக்கே அவதூறு கூறும் பழக்கம் இருக்கின்றது. நான் எதனை கூறினாலும் அதனை நேரிடையாக கூறுவேன் என ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தான் காலையில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து, மாலையில் அவர்களை ஒன்று கூட்டி  சுதந்திரக் கட்சியின் கிளையை அமைப்பதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கூறியதாகவும் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் அவதூறை கேட்டே அவர் அப்படி கூறியதாகவும் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) நேற்று கூறியிருந்தார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ரொஷான் ரணசிங்க,

பொலன்நறுவையில் வீழ்ச்சியடைந்துள்ள சுதந்திரக் கட்சியின் வேலைத்திட்டங்களை மறு உருவாக்கம் செய்வதற்காக சிறிசேன, விவசாயிகளின் பிரச்சினை மற்றும் பராக்கிரம சமுத்திரத்தின் நடைபாதை பிரச்சினை பிடித்துக்கொண்டார். சேதனப் பசளை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பது அமைச்சரவை எடுத்த கூட்டு தீர்மானம்.

அமைச்சரவையில் சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் மகிந்த அமரவீர போன்றவர்களும் இருக்கின்றனர். சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் இருக்கின்றது. அந்த கட்சியை சேர்ந்த ஓரிருவர் அரசாங்கத்தை விட்டு வெளியேறினால், அரசாங்கத்திற்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது என ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண(Lasantha Alagiyawanna), மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் இருக்கும் போது இந்த கதையை கூறியிருந்தால், அது நெறிமுறையாக இருந்திருக்கும்.

இப்படியான கதையை கூற போவதாக முன்னதாகவே கூறியிருந்தால், மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்திற்கு வந்திருப்பார். ஆளும் கட்சியினர் தொடர்ந்தும் மைத்திரிபால சிறிசேன மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அப்போது ஆசனத்தில் இருந்து எழுந்த ரொஷான் ரணசிங்க, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கு நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள் குறித்து நன்று தெரியும் எனவும் அவையில் இருக்கும் நேரத்தில் தன்னை பற்றி கூறுவதை நெறிமுறையற்றது என்பதை அவர் அறிவார் எனவும் கூறியுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025