பதவி விலகல் கடிதத்தை கையளித்த இராஜாங்க அமைச்சர்- மறுத்த கோட்டாபய!
கூட்டறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் பாவனையாளர் பாதுகாப்புத்துறை பிரதியமைச்சர் பி.வை.ஜி ரட்ணசேகர தமது பதவி விலகல் கடிதத்தை அரச தலைவரிடம் கையளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணப்படாத நிலையில் தமது அமைச்சினால் எவ்வித பயனும் இல்லை என்று கூறியே தாம் தமது பதவி விலகல் கடிதத்தை நேற்று கையளித்தாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் அரச தலைவர் அதனை ஏற்றுக்கொள்ளாத போதும், அவரிடம் கோரிக்கை விடுத்து அதனை கையளித்து விட்டு வந்ததாக ரட்ணசேகர குறிப்பிட்டார். அமைச்சு பொறுப்பை வகிக்கும் வகையில் தமது மனநிலை இல்லையென்றும் தாம் அரச தலைவரிடம் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.
இதேவேளை இந்த உரையின் போது குறிக்கிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரட்ணசேகர, அரச தலைவர் பதவி விலக வேண்டும் என்பது உட்பட்ட பல விடயங்கள் குறித்து அவரிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
பிரச்சினைகளுக்கு தீர்வை காணவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக ரட்ணசேகர தெரிவித்தார்.

