நாடாளுமன்ற அலுவல்களுக்கான குழு தொடர்பில் வெளியாகியுள்ள விபரம்!
சிறிலங்கா நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 115 இன் ஏற்பாடுகள் மற்றும் நாாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.
இதற்கமைய சபாநாயகர் இதன் தவிசாளராக நியமிக்கப்படுவதுடன், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், நாடாளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சியின் தலைவர், அரசாங்கக் கட்சியின் பிரதம கொறடா, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா உட்பட மேலும் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் 20 உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் அறிவித்திருந்ததுடன், மற்றுமொரு உறுப்பினரின் பெயர் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் கடமையாற்றுவதற்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்கள் வருமாறு,
சமல் ராஜபக்ஷ
நிமல் சிறிபால டி சில்வா
பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
டக்ளஸ் தேவானந்தா
டலஸ் அழகப்பெரும
விமல் வீரவன்ச
பசில் ரோஹண ராஜபக்ஷ
மஹிந்த அமரவீர
வாசுதேவ நாணாயக்கார
பிரசன்ன ரணதுங்க
எம். யூ. எம். அலி சப்ரி
கயந்த கருணாதிலக்க
ரவூப் ஹகீம்
அநுர திசாநாயக்க
டிலான் பெரேரா
றிஸாட் பதியுதீன்
ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார
மனோ கணேசன்
ஜீ.ஜீ. பொன்னம்பலம்
எம்.ஏ. சுமந்திரன்
