பொதுஜன பெரமுனவிலிருந்து புதிய நாடாளுமன்ற உறுப்பினர்!
parliament
podujana peramuna
sri Lanka
kaluturai
By Kalaimathy
பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
இன்றைய தினம் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னிலையிலேயே இவர் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் வாத்துவகே மன்சு லலித் வர்ணகுமாரவே இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த சமரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து நிலவிய வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2020 பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிட்டு 46,361 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்