எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது- நாடாளுமன்றில் கண்ணீர்விட்டு அழுத பெண் உறுப்பினர்!
Parliament of Sri Lanka
Sri Lanka
SL Protest
By Kalaimathy
தாம் அரசியலில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நடிகையுமான கீதா குமாரசிங்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தனது வீட்டுக்கு கடந்த வன்முறையின் போது பாரிய சேதம் விளைவிக்கப்பட்டு்ள்ளதாகவும் தெரிவித்தார்.
சுவிட்ஸர்லாந்தின் குடியுரிமையை ரத்துச்செய்து அரசியலுக்காக இலங்கை வந்த தனக்கு இன்று அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கீதா குமாரசிங்க குறிப்பிட்டார்.
மேலும் தாம் அரசியலில் இருந்து விடைபெற உள்ளதாக அழுகையுடன் கூறினார்.
தனது வீடு தாக்கப்பட்டபோது, தான் தனியாக ஒரு அறையில் பயத்துடன் நடுங்கிய நிலையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்