காலி தாக்குதல் விவகாரம்- புத்தளம் கழுதை ஒன்று இரும்பு பொல்லுடன் செல்வதை நான் பார்த்தேன்; நாடாளுமன்றில் பொன்சேகா ஆவசேம்!
விடுதலைப்புலிகளின் தாக்குதல் தொடர்பாக தற்போது கதைக்கப்படுவதாகவும் அது பொய்யானது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற வன்முறை அலரி மாளிகையில் ஆரம்பமானது. இதனை வேறு கட்சிகள் மீது சுமத்தி விட்டு பிரச்சினையை மூடி மறைக்கக் கூடாது. 9 ஆம் திகதி நடைபெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் உள்ளது.
புத்தளம் கழுதை ஒன்று இரும்பு பொல்லுடன் செல்வதை நான் பார்த்தேன். அந்த கழுதையின் பின் முதுகில் ஏறி மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் காவல்துறைமா அதிபர் சென்றார். இப்படியானவர்களின் பெயர் பட்டியல் வெளியில் வந்துள்ளது.
பிரதிப் காவல்துறைமா அதிபர் தள்ளாடி செல்வதை நாங்கள் கண்டோம். பிரதிப் காவல்துறைமா அதிபர் குண்டர்களின் தோளில் கையை போட்டுக்கொண்டு செல்கிறார். தண்டனை வழங்க வேண்டுமாயின் அதனை அலரி மாளிகையில் இருந்து ஆரம்பியுங்கள்.
எமது கட்சியினர் தவறு செய்திருந்தால் தண்டனை வழங்க வேண்டும். அன்றைய வன்முறை, மக்களின் ஆத்திரத்தால் ஏற்பட்ட ஒன்று. ஆளும் கட்சியின் கூட்டத்தில் காவல்துறைமா அதிபர் மற்றும் இராணுவ தளபதி மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அந்த அதிகாரிகளின் தொழில், வரையறை மற்றும் மதிப்பு என்ன என்பது தெரியும். வன்முறைச் சம்பவங்களை தடுக்க காவல்துறைமா அதிபர், இராணுவ தளபதி வரவில்லை என்று அவர்களுக்கு சேறுபூச வேண்டிய அவசியமில்லை.
காவல்துறைமா அதிபர் வரவில்லை என்று அவருக்கு சேறுபூசும் போது மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் காவல்துறைமா அதிபர் வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களுடன் காணப்பட்டார்.
பிரச்சினை காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி சென்றால், சட்ட ரீதியாக காவல்துறைமா அதிபர், இராணுவ தளபதியிடம் தேவையான உதவியை கோர வேண்டும். இராணுவம் சுயமாக சென்று காவல்துறையின் கடமைகளை செய்யாது.
இராணுவத்தின் மீது குறை கூறக் கூடாது. காவல்துறையினருக்கு நான் ஒரு ஆலோசனையை வழங்குகிறேன்.
உங்கள் தொழிலை நீங்கள் கட்சி சார்பின்றி செய்யுங்கள். சுதந்திரமாக செய்யுங்கள். தவறு செய்யும் அரசியல்வாதிகளை சட்டத்திற்கு அப்பால் சென்று காப்பாற்றும் வேலையை செய்ய வேண்டாம்.
சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் காடுகளில் மறைந்து கொண்டுள்ளனர். கடந்த காலத்தில் பயங்கரவாதிகள் வைக்கப்பட்டிருந்த தீவுகளில் உங்களது(ஆளும் கட்சியினர்) தலைவர்கள் வெளியில் வர முடியாது மறைந்துள்ளனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
