அதிகளவில் வாக்குகளை வழங்கி ஆட்சிப்பீடமேற்றிய அரச உத்தியோகத்தர்களுக்கு உச்சளவில் பதிலளித்த அரசாங்கம்- கடும் விசனம்!
அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை எனக் கூறியது பெரிய விடயம். அந்த அரச ஊழியர்களே ஓடோடிச் சென்று அதிகளவில் அஞ்சல் வாக்குகளை வழங்கினர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அரச சேவை நாட்டுக்கு சுமை எனக் கூறி தம்மை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக அதிகளவில் அஞ்சல் வாக்குகளை வழங்கிய அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் உச்சளவிலான பதிலை வழங்கி இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த (K.D.Lalkantha) தெரிவித்துள்ளார்.
கம்புறுகமுவை நகரில் நேற்று நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார நிகழ்ச்சிக்கு இடையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களில், ஆசிரியர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் என பலர் இருக்கின்றனர். இதே அரச ஊழியர்களே ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினருக்கு சிறப்பாக செய்தனர்.
மறுபுறம் இதற்கு நன்றிக்கடனாக அரசாங்கம், அரச ஊழியர்களுக்கு சிறப்பாக செய்துள்ளது எனவும் லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.