நாடாளுமன்றில் அதிகரித்துள்ள தவறான நடத்தைகள்- கவலை வெளியிட்டுள்ள சபாநாயகர்!
நாடாளுமன்றத்தில் அண்மைய காலமாக எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை காட்சிப்படுத்தி, தவறான நடத்தையை வெளிக்காட்டும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரத்தை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறாக பயன்படுத்தி கருத்துக்களை வெளியிட்டு வருவதன் மூலம் தமக்கு வாக்களித்த மக்களுக்கு அகௌவரத்தை ஏற்படுத்தி வருவதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எதிர்ப்பை வெளியிடுவது பொருத்தமானது மற்றும் நியாயமானது என நினைத்தாலும் நாடு அதனை ஏற்றுக்கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்திற்கே பாதிப்பு ஏற்படுகிறது. சட்டங்களை கொண்டு வந்து இவற்றை கட்டுப்படுத்த எந்த எண்ணமும் இல்லை எனவும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்