யாழ் மக்களுக்கு காத்திருக்கும் நற்செய்தி : அமைச்சர் வெளியிட்ட தகவல்
கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளுடன் நேற்று (07.02.2025) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு
இதன் போது ,தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ். மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அதற்கான அனுமதியினை உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் கடந்த 31ஆம் திகதி இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)