எரிவாயுவை கொள்வனவு செய்யும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
சமையல் எரிவாயு கொள்வனவின் போது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மேலதிகமாக பணத்தினை கொடுக்க வேண்டாம் என நுகர்வோர் அதிகார சபை கேட்டுள்ளது.
சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு சமையல் எரிவாயுவின் விலை சற்று குறைக்கப்பட்டுள்ள நிலையில் நுகர்வோர் அதிகார சபை பொதுமக்களிடம் குறித்த விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளது.
இலங்கையில் அதிகரித்த வாழ்க்கைச் செலவிற்கு மத்தியில் சமையல் எரிவாயு மற்றும் எரிபொருட்களின் விலைகள் சற்று குறைக்கப்பட்டுள்ள நிலையில், உணவுப் பொருட்களின் விலைகளும் ஓரளவு குறைப்பு செய்யப்பட்டுள்ளன.
நுகர்வோருக்கு அறிவுறுத்தல்
மேலும் பல பொருட்களிலும் விலைக்குறைப்பு செய்ய முடியும் என குடிசார் அமைப்புக்கள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், அந்த விடயம் குறித்து ஆலோசிக்கப்பட்டும் வருகின்றது.
இவ்வாறான நிலையில் சமையல் எரிவாயு விலை குறைப்பினை மேற்கொண்ட நிலையில் பொது மக்களை அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டாம் என நுகர்வோர் அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
எரிவாயு சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன்படி மாவட்டந்தோறும் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை மாவட்டங்களுக்கு ஏற்ப விலை மாற்றங்கள் பற்றிய கூடுதல் விவரங்களை அறிய லாஃப்ஸ் எரிவாயு வாடிக்கையாளர் சேவை எண் 1345 ஐ அழைத்து பொதுமக்கள் தெளிவினை பெற முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)