சூடுபிடிக்கும் தேர்தல் களம்: மகிந்த தலைமையில் மொட்டுக் கட்சியின் கூட்டம்
எதிர்வரும் அதிபர் மற்றும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து சிறிலங்கா பொதுஜன முன்னணி (Sri Lanka Podujana Peramuna) நடாத்தும் முதலாவது கூட்டம் அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டமானது அனுராதபுரம் ( Anuradhapura) - தலாவ நகரில் 26ம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெற உள்ளதாக வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள முதலாவது கூட்டத்திற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தலைமை தாங்க உள்ளார்.
கூட்டத்திற்கான ஏற்பாட்டுகள்
இந்தக் கூட்டங்கள் தேர்தலை இலக்கு வைத்து நாடு முழுவதிலும் தொகுதிவாரியாக நடாத்தப்பட உள்ளன.
இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாட்டு நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இளைஞர், மகளிர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |