நாங்கள் அர்ப்பணிப்புகளை செய்கிறோம் இளைஞர்களும் அர்ப்பணிப்பு செய்யுங்கள் - ராஜபக்ஷாக்களின் மற்றுமொரு வாரிசு!
sri lanka
parliament
rajabaksha
By Kalaimathy
நாடு தற்போது மிகவும் சிரமமான நிலைமைக்கு சென்றுள்ளதால், அனைவரும் அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிபுண ரணவக்க தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரும் அர்ப்பணிப்புகளை செய்து வருகின்றனர். இதனால், நாட்டின் இளைஞர்கள் அர்ப்பணிப்புகளை செய்ய தயாராக வேண்டும் எனவும் நிபுண ரணவக்க கூறியுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நிபுண ரணவக்க, ராஜபக்ச சகோதரர்களின் சகோதரியின் புதல்வர் என்பதுடன் அவர் கடந்த பொதுத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்த தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி