நியூஸிலாந்து தாக்குதல்தாரி தொடர்பில் சிறிலங்கா காவல்துறை வெளியிட்ட தகவல்
police
attack
new zealand
srilankan
By Sumithiran
நியூசிலாந்தின் ஒக்லாந்து புறநகர்பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பிரஜையுடன் அறிமுகமானவர்களிடம் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளதாக சிறிலங்கா காவல்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆரம்ப தகவல்களின்படி, தாக்குதல் நடத்தியவர் 2011 இல் மாணவராக நாட்டை விட்டு வெளியேறினார் என்று பொலிசார் தெரிவித்தனர்.
இலங்கை வெளியுறவு அமைச்சக செயலாளர் அட்மிரல் (Rtd) ஜெயநாத் கொலம்பகே இது தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையில்,
நியூசிலாந்து புலனாய்வாளர்களால் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு தேவையான உதவிகளை வழங்க இலங்கை அதிகாரிகள் தயாராக இருப்பதாக கூறினார்.