இன்று மக்கள் பிரச்சினைகளை கூறுவது ஐக்கிய மக்கள் சக்தியிடமே..! சஜித் பெருமிதம்
நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்துமாறும்,கல்வியை மேம்படுத்த உதவுமாறும், இந்நாட்டு மக்கள் அரசாங்கத்திடமிருந்தோ பிரதமரிடமிருந்தோ அல்லது அதிபரிடமிருந்தோ அன்றி ஐக்கிய மக்கள் சக்தியிடமிருந்தே கேட்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த குண்டசாலை திகன பிரதேசத்தில் இன்று (08) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அரசாங்கத்திடம் எதனையும் கோருவதால் எந்தப் பயனும் இல்லை என்பது மக்களுக்குத் தெரியும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாடு வங்குரோத்து நிலையில் உள்ள சூழ்நிலையிலும் ஐக்கிய மக்கள் சக்தி நாட்டுக்கு பெறுமதி சேர்க்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பெரும் கொள்ளை

இந்நாட்டின் பொதுச் சொத்து உள்ளிட்ட நிதி திருடப்பட்டது ராஜபக்ச யுகத்தில் தான் எனவும், அந்த பெரும் கொள்ளையினாலையே நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.