பிரதமர் பதவி குறித்து மைத்திரி வெளியிட்ட அறிவிப்பு!!
Maithripala Sirisena
Sri Lanka Politician
Prime minister
Sri Lanka Podujana Peramuna
Sri Lankan political crisis
By Kanna
சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏற்கமாட்டேன் என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கம்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "மகாசங்கத்தின் வழிகாட்டுதலின்படி கூடிய விரைவில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும், அவ்வாறு அமைக்கப்படாவிட்டால் இலங்கை கலவரங்கள் மற்றும் போராட்டங்களின் மையமாக இருக்கும்.
பொருளாதார மந்தநிலையில் இருந்து இலங்கையை மீட்பதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு திறமையும் அறிவும் இல்லை.
எனவே அனைத்து ஆளும்கட்சியை சேர்ந்த அமைச்சர்களும் பதவி விலக வேண்டும். அத்தோடு அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்து அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க வழிவகை செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
