ரணிலின் அரசியல் புரட்சி! சிறிலங்கா வரலாற்றில் ஏற்பட்ட திருப்பம்

Wickremesinghe Ranil Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis Sri Lanka Anti-Govt Protest
By Benat Jul 20, 2022 08:00 AM GMT
Report

இலங்கை, இரண்டரை கோடி மக்கள் வாழும் மிகச் சிறிய தீவாக இருந்தாலும், இலங்கையில் நாளுக்கு நாள் அரங்கேறி வரும் மாற்றங்கள் சர்வதேசம் உற்றுநோக்கும் வகையில் அதிரடி மாற்றங்களாகவே இருக்கின்றன.

குறிப்பாக இலங்கை அரசியல் களத்தில் நொடிக்கு நொடி மாற்றங்களைக் காணும் ஒரு களமாக மாறிவிட்டிருக்கின்றது. அதிலும் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவது அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது.

அவ்வாறானதொரு மாற்றத்தை இன்று இலங்கை மீண்டும் சந்தித்திருக்கின்றது. கடந்த ஒரு வாரமாக பதில் அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்க மிக குறுகிய காலத்திலேயே மி்கப்பெரிய வெற்றியை பதிவு செய்து, தன்னுடைய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை  அதிபர் என்ற பெயரை பதிவு செய்துள்ளார்..  

கடந்த பொதுத் தேர்தலில் வரலாறு காணாத வீழ்ச்சியை பதிவு செய்த ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்த ரணில் விக்ரமசிங்கவினால் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும் என எண்ணிய பலருக்கு பதில் அதிபராக ஒரு வாரம் நாட்டை ஆட்சி செய்த ரணிலின் வளர்ச்சியும், இலங்கையின் அதிபராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏகோபித்த வாக்குகளின் மூலம் பதிவு செய்த வெற்றியும் பிரம்மிப்பாக இருக்கும்.

225 பேர் சூழ்ந்திருந்த அவையில் தனியொருவவராக இருந்து இன்றைய இலங்கை அரசியலில் கிங் மேக்கராக ரணில் விக்ரமசிங்க உருவெடுத்தார். ஆனாலும், கால சூழ்நிலைகள் அவருக்கு ஏற்றதுப் போல வெற்றியைக் கொடுத்தாலும், அவருக்கு அதிர்ஷ்டமும் கைகொடுத்தது என்பதே உண்மை. 

அதிபர் ஆசனத்தில் அமர்வது ரணிலுக்கு பல வருடங்கள் கனவாகவே இருந்த நிலையில், பொதுத் தேர்தலில் பாரிய தோல்வியைச் சந்தித்து, தேசியப் பட்டியல் மூலம் கிடைத்த ஒரு ஆசனத்தை வைத்து அதிபர் என்ற இலக்கினை அடைந்துள்ளார்.

ரணிலின் காய் நர்த்தல்கள் அவருக்கு அதிபராக பதவி ஏற்கும் அளவிற்கு வாய்ப்புக்களை மிக இலகுவாகவே அள்ளித் தந்தது.  எனினும், எதிர்தரப்பில் போட்டியிட்ட டலஸ் அழகப் பெருமவுக்கு அதிகரித்த ஆதரவுகள் காரணமாக ரணிலிடம் இருந்து இந்த அதிபர் பதவி கையைவிட்டுச் சென்றுவிடும் என்ற ஐயப்பாட்டையும் தோற்றுவித்திருந்தது.  

ரணில் கடந்து வந்த பாதை

1970 களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக தனது அரசியல் பயணத்தினை ஆரம்பித்தார் ரணில், 1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்தார். அதனைத் தொடர்ந்து 1980ஆம் ஆண்டு கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்று ஒன்பது ஆண்டுகளாக பதவி வகித்த நிலையில் 1993ஆம் ஆண்டு முதன்முறையாக இலங்கையின் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்தார்.

அதன் பின்னர் 1994ஆம் ஆண்டு அவர் ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றார், இன்று வரை அந்தப் பதவியில் தொடர்ந்து கொண்டும் உள்ளார்.

பின்னரான காலப்பகுதியில், 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிக் கொண்டார்.

அப்போது ஆட்சியில் இருந்த சந்திரிக்கா தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டபோது 2001ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் ரணில் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியதிகாரத்தைக் கைப்பறியது. மீண்டும் ஒருமுறை ரணில் விக்ரமசிங்க பிரதமரானார்.

எனினும், அவரது பதவிக் காலம் முடியும் முன்னதாகவே அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் நடவடிக்கையால் ரணில் தலைமையிலான அரசாங்கம் கலைக்கப்பட்டது. அதன் பின்னர் நடத்தப்பட்ட தேர்தலிலும் ரணில் தோல்வியையே தழுவிக் கொண்டார்.

ரணிலின் தோல்வியும் ராஜபக்சவினரின் எழுச்சியும்

மீண்டும் 2005ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலிலும், ரணில் விக்ரமசிங்க தோல்வியைத் தழுவிக் கொண்டதுடன், ராஜபக்ச குடும்பத்தாரின் குடும்ப எழுச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டதும் அந்தத் தேர்தலே.

2005ஆம் ஆண்டு இடம்பெற்ற அதிபர் தேர்தலில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெற்றி வாகை சூடிக் கொண்டதுடன் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை கையேற்றார். இவ்வாறு தொடர் தோல்விகளைச் சந்தித்த ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்ததும் பெறும் தோல்வியாகவே அமைந்தது.

மூன்று தசாப்த காலங்களாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான அந்த அரசு யுத்த வெற்றியை பிரதானமாகக் கொண்டு 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பறிக் கொண்டது.

எனினும், ரணில் விக்ரமசிங்க தலைமையில் இறுதிப் போரை வழிநடத்திய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்பட்டு தோல்வியைக் கண்டதுடன், ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் களமிறங்கவில்லை என்பதுடன், யானை சின்னத்துக்கு பதிலாக அன்னப்பறவை சின்னமே முன்னிலைப்படுத்தப்பட்டது.

ரணிலுக்கு கை கொடுத்த அன்னப்பறவை

இடையில் கண்ட பல தோல்விகள் ரணிலின் அடுத்த அரசியல் நகர்வுக்கு மிகப்பெரிய பலமாகவே இருந்தது எனலாம், பல விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டிய நிலை ரணிலுக்கு ஏற்பட்டாலும், நிதானித்து காய் நகர்த்தல்களை மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்க அந்த 2015ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை களமிறக்கினார்.

இது, ராஜபக்சவின் அரசியல் வரலாற்றில் ஒரு சிறிய சறுக்கலை ஏற்படுத்தியதுடன் ரணிலுக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பாக அமைந்தது. அந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியதுடன், மீண்டும் பிரதமர் பதவிக்குத் தேர்வானார், அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு நடத்தப்பட்ட பொதுத் தேர்தலிலும் மிகப்பெரிய வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தார் ரணில்.

பதவிக்கு வந்தவுடன் அதிரடியான பல மாற்றங்களை ரணில் விக்ரமசிங்க ஏற்படுத்தியிருந்தார். அதில் ஒன்று அரசியலமைப்பு சீர்த்திருத்தம். 18ஆவது சீர்த்திருத்தத்தில் இருந்த ஒருவர் எத்தனை முறை வேண்டும் என்றாலும் அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலை 19ஆவது அரசியலமைப்பின் மூலம் மாற்றியமைக்கப்பட்டது.

மைத்திரியின் திடீர் அரசியல் புரட்சி

எனினும், ரணிலின் நிர்வாகத்திற்கும், மைத்திரியின் ஆளுமைக்கும் இடையில் ஒத்துவராததனால் என்னவோ இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் அதிகரித்து கொண்டே இருந்தன. இதன் விளைவு யாரும் எதிர்பாராத நேரத்தில் மகிந்த ராஜபக்சவை பிரதமராக அறிவித்தார் மைத்திரி...

திடீரென ஏற்பட்ட இந்த அரசியல் மாற்றம் இலங்கையை ஸ்தம்பிதம் அடையச் செய்தது எனலாம். இது ரணிலின் பயணத்தில் ஏற்பட்ட மற்றுமொரு அடி. அதன் பின்னரான நீதிமன்ற நகர்வுகளையடுத்து, எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றார்.

ஜனாதிபதி கனவை தியாகம் செய்த ரணில்

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 8 ஆவது அதிபர் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறியாகவே இருந்தார். எனினும், கட்சிக்குள் எதிர்ப்புகள் வலுத்ததாலும், பங்காளிகள் விடாப்பிடியாக நின்றதாலும், நாட்டு மக்கள் சஜித்தை கோரியதாலும் மூன்றாவது முறையும் தியாகம் செய்ய வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்ததோடு, கட்சி இரண்டாக பிளவடைந்து சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உயதமானது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பொதுத்தேர்தலில் இரு அணிகளும் தனித்தனியாகவே போட்டியிட்டன. இதில் ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பெரிய வரலாற்றுத் தோல்விகளைத் தழுவிக் கொண்டது.

தேர்தலின் மூலம் ஒரு ஆசனத்தைக் கூட பெற முடியாத துரதிஷ்ட நிலைக்கு கட்சித் தள்ளப்பட்டது. ஐக்கிய தேசியக்கட்சி படுதோல்வியை சந்தித்து நாடு முழுவதும் 2.15% வாக்குகளையே பெற்றது. அத்துடன், தேசியப்பட்டியல் ஊடாக ஒரு வாய்ப்பு கிடைத்தது.

நாடாளுமன்ற அரசியலுக்கு வந்த பிறகு ரணில் எந்தவொரு பொதுத்தேர்தலிலும் தோற்றதில்லை. 42 வருடங்களாக தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனையும் படைத்துள்ளார்.

ரணிலின் மீள் அவதாரம்

எனினும், கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் ஆதரவை இழந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசியப்பட்டியல் ஊடாக மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.

பாரிய அரசியல் அனுபவம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவி வகித்த போதிலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்பதோடு, அதிபர் பதவி என்பது அவரைப் பொறுத்த மட்டில் கைக்கு எட்டாத ஒன்றாகவே இருந்தது.

நாடாளுமன்ற மீள் பிரவேசத்தின் பின்னர் அப்போதைய பிரதமர் மகிந்தவும், ரணிலும் பங்கேற்ற இரவு விருந்தொன்று பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக இப்போதைய மாற்றங்கள் அப்போதே சர்ச்சைகளாக வலம் வந்தன என்றுகூட கூறலாம். ரணிலின் காய் நகர்த்தல்கள் அப்போதே ஆரம்பமாகிவிட்டன.

இதன் பின்னரான நாட்களில் இலங்கையின் பொருளாதாரம் அதளபாதாளத்தில் விழுந்த போது, இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வந்த பின்னணியில், ரணில் விக்ரமசிங்கவின் ஆளுமை மற்றும் அவருக்கு சர்வதேசத்தில் இருக்கும் தொடர்புகள், அதனை கையாளும் திறன் ஆகியவற்றினால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காணும் திறன் அவருக்கிருப்பதாக பலரும் கருதினர்.

அத்துடன், அதிகரித்த மக்கள் போராட்டங்களும் ராஜபக்சர்கள் தொடர்பில் சிங்கள பெரும்பான்மை மக்களிடத்தில் இருந்த பிம்பம் சுக்குநூறாக சிதறிப் போனமையும், அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீது வன்முறை ஏற்படுத்த முயற்சித்தமை காரணமாகவும், மே மாதம் 9ஆம் திகதி இலங்கை அரசியல் வரலாற்றில் ராஜபக்சர்கள் என்னும் சாம்ராச்சியத்திற்கு பெரும் அடி விழுந்தது.

மக்கள் புரட்சியினால், ராஜபக்ச குடும்பத்தில் பிரதான இடம் கொண்ட அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டார்.

இவ்வாறானப் பிண்ணனியிலேயே, பிரதமராக ரணில் பதவியேற்றிருந்தாலும் கூட அவரது இலக்கு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் பதவிக்கே என பலரும் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். காலப்போக்கில் அதுவே நடைபெற ஆரம்பித்தது.

அரசியல் களத்தைப் பொறுத்தமட்டில் ரணில் விக்ரமசிங்க ஒரு நரியாக பலராலும் வர்ணிக்கப்படுகின்றார், அதற்கு சிறந்த உதாரணமாக ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை வைத்துக் கொண்டு தற்போதைய ஆட்சி அதிகாரத்திற்கு வந்தமையை கூறலாம்.

ரணில் மீதான பலரது அதீத நம்பிக்கைக்கு அவரது ஆளுமை பிரதான காரணமாக இருந்தது. மிகவும் பொறுமையாக இருந்து, அலட்டல் இல்லாத ரணிலின் காய் நகர்த்தல்களும், அரசியல் நாகரீகமும் கூட அவரின் வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் வழிசமைத்தன.

எனினும் அவர் பிரதமர் பதவியை ஏற்றபோதும் கூட அதற்கு பின்னாலும் அவரது சில தந்திரங்கள் இருப்பதாகவே கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

குறிப்பாக பிரதமர் பதவியை ஏற்பதற்கு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பலருக்கு அழைப்பு விடுத்திருந்தபோதும், சஜித் மற்றும் அநுர உள்ளிட்டவர்கள் அதிபர் கோட்டாபய பதவி விலகினால் பதவியேற்கத் தயார் என்றனர்.

ஆனால், ரணில் ஒருவரே தான் பதவியேற்கின்றேன் ஆனால் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை கலைக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற உறுதியை கோட்டாபயவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

அவர் எந்த காரணத்திற்காக இவ்வாறான உறுதிமொழியைப் பெற்றாரோ தெரியாது. ஆனால் அந்த உறுதி மொழியின் பின்னால் ஒரு ராஜதந்திர நகர்வு இருந்ததாகவும்... அது இப்போது பாரிய வெற்றியைக் கொடுத்திருக்கின்றது என்றே எண்ணத் தோன்றுகின்றது. ஏனென்றால் அரசியல் ரீதியான நகர்வுகளை கணிக்கக் கூடிய, எதிர்வுகூறல்களை கூறும் தீர்க்கதரிசியாக ரணில் காணப்படுகின்றார்.

குறிப்பாகச் சொல்லப் போனால், போராட்டக் காரர்களின் முதல் கோஷமாக இருந்தது கோட்டாபய பதவி விலக வேண்டும் என்பது. கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் கிடைக்கும் வரை  அதுவே அவர்களின் கோஷமாக இருந்தது. இவ்வாறு இருக்க போராட்டங்கள் நடக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டது கோட்டாபயவின் பதவிக்கு ரணில் வைக்கும் மறைமுக செக் காக இருக்கலாம் என அரசியல் பரப்பில் கருத்துக்கள் கூறப்பட்டன. ஆனால் அதுவும் பலித்தது.

கடந்த 9ஆம் திகதி திரண்ட போராட்டக்காரர்களின் எதிர்ப்பால் கோட்டாபய பதவியை துறந்து புற முதுகிட்டு நாட்டை விட்டு தப்பி ஓடினார் என்றே வரலாறு கூறும். ரணிலின் திட்டமும் பலித்தது. அடுத்து இரு நாட்களிலேயே பதில் அதிபராக ரணில் பதவியேற்றார்.    

அதன் பின்னரான நாட்களில் அடுத்த அதிபர் தேர்தலுக்கான போட்டிகளும் அதிகரித்திருந்த நிலையில், ஒவ்வொருவருக்குமான ஆதரவுகளும் கட்சி சார்பாக வெளியிடப்பட்டிருந்தன. 

அதன் முடிவுகளின் அடிப்படையில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க 134 என்னற பெரும்பான்மை  வாக்குகளைப் பெற்று இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

குறிப்பாக ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வரலாற்றில் பல தடவைகள் பிரதமராக பதவியேற்றிருந்த போதிலும், பல பதவிகளை வகித்திருந்த போதிலும்  அதிபர் பதவி என்பது அவருக்கு எட்டாக்கணியாகவே இருந்தது. 

ஆனால்,  பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பிரதமர் பதவியைப் பெற்றுக்கொண்டதையும் விட, பொதுத்தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு கிடைத்த ஒரேயொரு ஆசனத்தை வைத்து பிரதமராகி, இன்று சர்வதேசம் எதிர்பார்த்த இலங்கையின் அடுத்த அதிபர் என்ற வரலாற்றில் தடம் பதித்துள்ளார் ரணில்.......

ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய் வடக்கு, New Jersey, United States

19 Apr, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு அளுத் மாவத்தை, Brampton, Canada

23 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, La Plaine-Saint-Denis, France

20 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lincolnshire, United Kingdom

22 Apr, 2015
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சுவிஸ், Switzerland

15 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Aulnay-sous-Bois, France

23 Apr, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், France

22 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், பிரான்ஸ், France

22 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, மலேசியா, Malaysia, ஜேர்மனி, Germany

22 Apr, 2021
நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

02 Apr, 2005
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, தெல்லிப்பழை, Rochester, United States

21 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கந்தர்மடம், கொழும்பு

20 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024