பிரதமர் ஆகிறாரா ரணில்? அதிகாரத்தை மாற்ற புதிய தந்திரம்
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தேசிய அரசாங்கம் உருவாக்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று அரச - எதிர் தரப்பை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த வியூகம் வகுக்கப்படுவதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிான செய்திக் குறிப்பில்,
“ எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கவுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராகவும், பசில் ராஜபக்ச நிதி அமைச்சராகவும் நீடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்க மாத்திரம் இருக்கின்ற போதிலும், ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பிரிந்து செல்லும் சுமார் 15 பேர் கொண்ட குழு தேசிய அரசாங்கத்தில் இணையவுள்ளனர்.
இந்தத் தேசிய அரசாங்கத்தின் விசேட அம்சமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மூன்று சக்திவாய்ந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இது தொடர்பில் அரசாங்க தரப்பிலிருந்து எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
