அநுரவின் வாக்குறுதிகளுக்கு முட்டுக்கட்டை போடும் மகிந்த தரப்பு...!
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் நிர்வாகப் போக்கைச் சீர்குலைக்கும் நோக்கில், மகிந்த ராஜபக்ச தரப்பினர் அரசியல் ரீதியான கடும் சவால்களையும் முட்டுக்கட்டைகளையும் உருவாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கையைத் தளர்த்தும் வகையில், பழைய அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து திரைமறைவில் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு, ஆட்சியை நெருக்கடிக்குள்ளாக்க முயல்வதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், பலமான எதிர்க்கட்சியாகச் செயற்பட வேண்டிய சஜித் பிரேமதாச, அரசாங்கத்தின் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒருவித அரசியல் மந்தநிலை மற்றும் தெளிவற்ற போக்கைக் கடைப்பிடித்து வருகின்றார்.
ஒருபுறம் மகிந்த தரப்பின் முட்டுக்கட்டைகள், மறுபுறம் பலவீனமான எதிர்க்கட்சி என நிலவும் முரண்பாடான சூழலில், அநுர அரசாங்கம் தனது வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதில் பாரிய சவால்களைச் சந்தித்து வருகின்றது.
இந்த அரசியல் சதுரங்கப் போட்டியில் அநுரவின் அரசாங்கம் தனது பிடியைத் தக்கவைக்குமா ? அரசாங்கத்தின் அடுத்தகட்ட நகர்வு மற்றும் தற்போதைய அரசியல் களம் குறித்து விரிவாக ஆராய்கிறது லங்காசிறியின் இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |