புலிகளின் போரில் படையினர் மறைத்த கதைகளின் விசில்! கொழும்பில் பிடிபட்ட Sniper
புலிகளின் போரில் படையினர் மறைத்த கதைகளின் விசில் புளோவரின் மரணமும் கொழும்பில் பிடிபட்ட சினைப்பரும் யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஒரு முறை சிறிலங்காவின் ஜனாதிபதியின் பிரசன்னத்துடன் நல்லிணக்கப்பொங்கல் பொங்கப்போகும் நிலையில் தெற்கில் அவரது ஜேவிபி மீது பௌத்தபிக்குகள் பொங்கத்தலைப்படுகின்றனர்.
ஜேவிபியின் தொழிற்சங்க முகமான லால்காந்த பௌத்த மகா சங்கத்தில் ஒரு முகத்தை மிகிந்தலை காட்டுமிராண்டி என்ற சொல்லாடலால் அவமதித்து விட்டதால் அநுர அரசாங்கம் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சிறிலங்கா பௌத்த காவிகளின் தேசிய சங்க பேரவை கச்சை கட்டியதும் அரசாங்கம் தனது சர்ச்சைக்குரிய கல்விச் சீர்திருத்தின் ஒரு பகுதி அடுத்த ஆண்டில் தான் ஒரு யூவடிவத்திருப்பத்தை எடுத்தது.
எனினும் திட்டமிட்டப்படி பாலர் பாட கல்விச் சீர்திருத்தம் இந்த ஆண்டு வரும் எனவும் அது இன்று அறிவித்தது.
இந்த கல்விச்சீர்திருத்தத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் கல்வியமைச்சர் சக பிரதமர் ஹரிணியை பாலினரீதியில் விமர்சித்த பௌத்த பிக்குவை லால்காந்த மிகிந்தலை காட்டுமிராண்டி என வர்ணித்தமை இப்போது காவிகளை சீற்றப்படுத்திவிட்டது.
தமிழர்களின் அரசியல் உரிமை வெளிப்பாடுகளுக்கு எதிராக இதே பௌத்தகாவிகள் பொங்கியெழுந்த காலத்தில் அதனை உள்ளுர இரசித்த அதே ஜேவிபிக்கு எதிராகத்தான் பிக்குகளின் ஒரு தரப்பு பொங்கத்தலைப்டுகின்றது.
ஒருகாலத்தில் தமிழர் தாயகத்தின் மீதான போர் காலத்தில் சிறிலங்கா படைத்தரப்பின் முறைகேடுகளையும் இழப்புகளையும் மக்களுக்கு பகிரங்கப்படுத்திய காலத்தில் அரசதரப்பு மற்றும் படையத்தரப்பால் அச்சுறுத்தலும் மிரட்டலும், விடுக்கப்பட்ட புலனாய்வு ஊடகர்களில் ஒருவரும் சிறிலங்காவிள் முக்கிய பாதுகாப்பு ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் இன்று காலமானலும் அவரை மையப்படுத்தி இன்னமும் சில காலம் ஆகாத கதைகள் உள்ள நிலையில் இந்தவிடயங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |