பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை! (படங்கள்)
மருதானையிலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை கொழும்பு மருதானை பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
முஸ்லீம் இடதுசாரி முன்னணியின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், முஜிபுர் ரகுமான், மனோ கணேசன் ஆகியோர் இது தொடர்பான ஆவணத்தில் கைச்சாத்திட்டிருந்தனர்.
அத்துடன், அரசியல் செயற்பாட்டாளர் விக்ரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட சிவில் சமூக பிரதிநிதிகளும் பெருமளவிலான பொதுமக்களும் இதன்போது கையெழுத்திட்டிருந்தனர்.
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நாட்டின் பல பாகங்களிலும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
3 நாட்கள் முன்