இலங்கையில் அதிகரித்துள்ள வறுமைக்கோடு : வெளியான அறிக்கை
வறுமைக்கோடு கடந்த ஒரு தசாப்த காலப்பகுதிக்குள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012 மற்றும் 2013 இல் 5,223 ரூபாயாக இருந்த வறுமைக் கோடு இந்த ஆண்டு ஜனவரிக்குள் 17,014 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் 2013 இல் பதிவு செய்யப்பட்ட 5,223 ரூபாயாக இருந்த வறுமைக் கோடு 2016ல் 6,117 ரூபாயாக மாத்திரமே அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், 2022 இல் பொருளாதார நெருக்கடி பொருளாதார மற்றும் சமூக அழிவை ஏற்படுத்திய நிலையில் பணவீக்கம் உயர்ந்து வறுமைக் கோட்டிற்கு இரு மடங்கு அதிகரிப்புக்குத் தள்ளியதுடன் 15,970 ரூபாயை எட்டியதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டம்
அத்தோடு, கொழும்பு (Colombo) மிக உயர்ந்த வறுமைக் கோட்டைப் பதிவு செய்த நிலையில், 2024 மே மாதத்தில் 17608 ரூபாயுடன் தரவரிசையில் உள்ளது எனினும் அது ஜனவரியில் 18350 ரூபாயாக இருந்துள்ளது.
மாவட்ட வாரியான வறுமைக் கோட்டுடன் ஒப்பிடுகையில் கொழும்பு மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன் இந்த ஆண்டு மே மாதத்தில் 17,608 ரூபாயாக வறுமைக் கோடு பதிவாகியுள்ளது அத்தோடு ஜனவரியில் அது 18,350 ரூபாயாக இருந்தது.
வறுமைக் கோடு
17,517 ரூபாய் வறுமைக் கோட்டுடன் கம்பஹா (Gampaha) மாவட்டம் இரண்டாம் இடத்திலும், 17,169 ரூபாயுடன் நுவரெலியா (Nuwara Eliya) மூன்றாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது அத்தோடு மொனராகலை (Monoculture), கிளிநொச்சி (Kilinochchi ) மற்றும் அம்பாந்தோட்டை (Ambantota) போன்ற ஏனைய மாவட்டங்கள் முறையே 15,610 ரூபாய், 15773 ரூபாய் மற்றும் 15,862 ரூபாயாக வறுமைக் கோட்டுடன் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உத்தியோகபூர்வ வறுமைக் கோடு என்பது உணவு, தங்குமிடம் மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட தனிநபர் அல்லது குடும்பத்திற்குத் தேவைப்படும் குறைந்தபட்ச வருமானத்தைக் குறிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |