நாட்டை இருளில் மூழ்கடிப்பது அநீதியானது - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு
sri lanka
Johnston Fernando
power cut
By Vanan
நாட்டு மக்களை இரு தினங்கள் இருட்டில் வைத்திருக்க முயல்வது அநீதியான முடிவாகும் என ஆளும் தரப்பு பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ள பேலியகொட புதிய களனி பாலத்தின் இறுதிக்கட்ட நிர்மாணப் பணிகளை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேரில் சென்று பார்வையிட்டார்.
புதிய களனிப் பாலம் கொழும்பு நகரின் அழகை மேம்படுத்தும் என்பதால் கோபுரங்களில் நிர்மாணிக்கப்பட்ட பாலத்திற்கருகில் நிலத்தை அழகுபடுத்துவதற்காக நடப்பட்டுள்ள உள்ளூர் தாவரங்கள் குறித்து அமைச்சர் இதன்போது கவனம் செலுத்தினார்.
புதிய களனிப் பாலத்தை பார்வையிடும் விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.