நாட்டில் மீண்டும் மின்சாரம் தடை- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கை மின்சார சபையின் அனல் மின் நிலையங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நேற்றைய தினம் இரண்டாவது தடவையாக மூடப்பட்ட போதும், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தற்போது பயன்படுத்தப்படுகின்றது.
எவ்வாறாயினும், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை கொண்டு வந்த கப்பலின் எரிபொருளை தரையிறக்குவதற்கான நாணய கடிதத்தை பெறுவதில் டொலர் நெருக்கடியால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனினும், கடந்த 3 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருளை தரையிறக்கும் செயற்பாடு முத்துராஜவெலயில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு துறைமுகத்தின் பிரதானி நிர்மால் சில்வா தெரிவித்துள்ளார்.